Feed on
Posts
Comments

Monthly Archive for January, 2012

அன்பு

அன்பே கடவுள் அருளாட்சியின் இரகசியமும், சர்வ-இரக்கமிக்கவரின் வெளிப்படுகையும் ஆன்மீகப் பொழிவுகளின் ஊற்றுக்கண்ணும் ஆகும் என்பதை உறுதியாகவே நீ அறிவாயாக. அன்பே விண்ணுலகின் கருணைமிகு ஒளியும் மனித ஆன்மாவுக்கு உயிர்ப்பூட்டும் புனித ஆவியின் நித்திய மூச்சுக்காற்றும் ஆகும். அன்பே கடவுள் மனிதனுக்குத் தம்மை வெளிப்படுத்திக்கொள்ளும் காரணமும், தெய்வீகச் சிருஷ்டிக்கிணங்க எல்லா வஸ்த்துக்களின் மெய்ம்மையினுள்ளும் இயல்பாகவே வீற்றிருக்கும் இன்றியமையா பிணைப்பும் ஆகும். அன்பே இம்மையிலும் மறுமையிலும் உண்மையான கழிபேருவகையை உறுதிபடுத்தும் ஒரே வழியாகும் அன்பே இருளில் வழிகாட்டும் ஒளியும், மனிதனைக் […]

Read Full Post »

“வாய்மையே எல்லா மனித நற்பண்புகளுக்கும் அஸ்திவாரமாகும். -பஹாவுல்லா-“ பொய் சொல்வதென்பது இன்று ஒரு சாதாரண செயலாகிவிட்டது. உலகம் செயல்படுவதே பொய்களின் அடிப்படையில்தான் எனக் கூறலாமோ என்று தோன்றுகிறது. சினிமாப் படங்களில் கற்றுக்கொள்ளப்படும் விஷயங்கள் பல பொய்யானப் பண்புகளை மனதில் தோற்றுவிக்கின்றன. விளம்பரதாரர்கள் வியாபாரத்திற்காக பொய்களுக்கு பலவித அலங்காரங்கள் செய்வித்து அவற்றை தங்கள் பொருள்களுக்கு அனிவித்து சந்தையில் அவிழ்த்துவிட்டுள்ளனர். அரசியல் ரீதியில் சில போர்கள் கூட உண்மைக் காரணத்தை மறைத்து பொய்க் காரணங்களின் அடிப்படையில் தொடுக்கப்படுகின்றன. இப்படி உலகில் […]

Read Full Post »

மறுபிறவி நம்பிக்கைக் குறித்துப் வழங்கப்படும் பின்வரும் கருத்துக்கள் சிந்தனையை தூண்டும் நோக்கங் கொண்ட மேலோட்டமான சில எண்ணங்களே. மிகவும் ஆழமான மற்றும் விசாலமான இ்வ்விஷயத்தை பின்வரும் சில வார்த்தைகளின் மூலம் மட்டுமே விளக்கிட முடியாது. ஒருமுறை பஹாவுல்லாவின் திருமகனாராகிய அப்துல் பஹாவிடம் மறுபிறவி பற்றி வினவப்பட்டது. அதற்கான அவருடைய பதிலின் சில பகுதிகளின் சுருக்கம் பின்வருமாறு: வழங்கப்படும் விளக்கம் மெய்ம்மையை விளக்கிடவன்றி மற்றவர்களின் நம்பிக்கைகளைக் குறைகூறவே ஏளனம் செய்திடவோ அல்ல; உண்மையை விளக்கவுரை செய்திடுவதே நோக்கம். மற்றவர்களின் […]

Read Full Post »

இஸ்ரேல் நாட்டில் உள்ள பஹாய் புனிதஸ்தலங்களுள் இரண்டு மிகவும் முக்கியமானவையாகும். பஹாய் சமயத்தின் இரட்டை அவதாரங்களான பாப், பஹாவுல்லா இருவரும் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ள இரு இடங்களும் பஹாய்களால் புனிதஸ்தலங்கள் என கொண்டாடப்படுகின்றன. உலகம் முழுவதிலிமுள்ள பஹாய்கள் இவ்விடங்களுக்கு புனித யாத்திரை மேற்கொண்டிடவும் ஊக்குவிக்கப்படுகின்றனர்.பஹாவுல்லா அவர்கள் 1892ல் தமது விண்ணேற்றத்திற்குப் பிறகு ஆக்கோ நகரில் பாஹ்ஜி எனும் இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளார். பாப் அவர்கள் 1850ம் ஆண்டு அரசாங்கத்தால் மரண தண்டனைக்கு உட்படு்த்தப்பட்டு 750 இராணுவ வீரர்களின் துப்பாக்கி […]

Read Full Post »

உடல்நலம் தேவைப்படும்போது மருத்துவ உதவியை நாடாது இருந்திடாதீர்கள், ஆனால், உடல்நலம் தேறியவுடன் அதைத் தவிர்க்கவேண்டும்… முடிந்தவரை, மருந்துவகைகளின் பயன்பாட்டைத் தவிர்த்து நோயை உணவின் மூலமாக தீர்த்திட முயலுங்கள்; உங்களுக்குத் தேவைப்படுவது ஒரே ஒரு மூலிகையில் இருந்திடக் கண்டால், பல்கூறான மருந்துவகைகளை நாடாதீர்கள். உடல்நலம் நன்றாக இருக்கும்போது மருந்துவகைளை நாடாதீர்கள், ஆனால் தேவைப்படும் போது மட்டுமே அவற்றைப் பயன்படு்த்துங்கள். -பஹாவுல்லா- மேற்கண்ட குறிப்பின் வாயிலாக உடல்நலக் குறைவை உணவுவகைகளின் வாயிலாகவே தீர்த்திட முயலவேண்டும் என்பது பஹாவுல்லாவின் அறிவுரையாகும். இவ்வகையில் […]

Read Full Post »

குடும்பப்பெண்களின் ஒரு முக்கிய பணி சமையல் செய்வது மற்றும் திரண்டுவிட்ட பாத்திரங்களை சுத்தமாக கழுவுவது. பின்வரும் குறும்படம் பாத்திரங்களை எப்படி நன்கு கழுவுவது என்பதை எடுத்துக்காட்டுகின்றது. இதில் கற்றுக்கொள்வதற்கு நிறையவே உள்ளது. பாத்திரங்களை இப்படித்தான் கழுவவேண்டும்

Read Full Post »

உலகில் பலவிதமான மனிதர்கள் இருக்கின்றனர். செயல்பாட்டை பொருத்தவரை இவர்களை 6 விதமாக பிரிக்கலாம். நீங்கள் இதில் எந்த விதம்?   பலூன் – இவர் வெறும் காற்று நிரைந்தும் கோபம் கொண்டால் அல்லது ஏதாவது புரியாவிட்டால் உடனே வெடிப்பவர்   பூனைக்குட்டி – இவரை சதா வாஞ்சையுடன் பாராட்டிக்கொண்டிருந்தால் செயல்படுவார்   தள்ளுவண்டி – இவரை யாராவது தள்ளிக்கொண்டிருந்தால் செயல்படுவார்   கனோ (சிறுதோணி) – இவரை யாரவது இயக்கிக்கொண்டிருக்கவேண்டும் இல்லாவிட்டால் செயல்படமாட்டார்.   மின்விளக்கு – […]

Read Full Post »