Feed on
Posts
Comments

Monthly Archive for October, 2011

http://www.bahai.us/2011/10/12/jack-and-farzaneh-guillebeaux/ அக்டோபர் 12, 2011 பெரும்போலானோருக்கு ஜேக், பஃர்ஸானே ஜோடி காதல் வயப்பட்டது சரியாகப்படவில்லை. 1960களில் வெள்ளையருக்கும் கருப்பருக்கும் இடையிலான காதல் உறவுகள் அனுமதிக்கப்படவில்லை. தடைசெய்யப்பட்டிருந்தது. ஆனால், பஹாய்கள் அதை அவ்வாறு காணவில்லை. வெவ்வேறு இனங்களுக்கிடையிலான திருமணங்கள் மனிதகுலத்திற்கு ஆற்றப்படும் சேவையே என ஒரு முறை பஹாவுல்லா கூறியுள்ளார் மற்றும் இவ்வார்த்தைகளே 1965ல் திருமணம் செய்துகொள்வதெனும் இந்த ஜோடியின் தீர்மானத்தின் உந்துசக்தியாக இருந்தது. இந்த ஜோடி ஆஷ்வில் N.C. நகரின் பஹாய் விளக்க கூட்டம் ஒன்றில் சந்தித்தனர். […]

Read Full Post »

வயதான பிச்சைகாரருக்கு குடை பிடித்து உதவிய பெண் திடீரென கடும் மழை பெய்ய துவங்கியது. கால்கள் செயலிழந்த வயதான பிச்சைக்காரர் ஒருவர் மழையில் நனைந்திட ஆரம்பித்த போது சிறு வயது பெண் ஒருவர் அது கண்டு தான் நனைந்தாலும் பரவாயில்லை அப்பெரியவர் நனையாமல் இருந்திட தன் குடையை அவர் தலைக்கு உயரே பிடித்து உதவினார். அப்போது சீருடையில் இருந்த ஒருவர் (காவலர்) அச்செயலை பார்த்துக்கொண்டிருக்கின்றார். சீனாவின் ஸூஸௌ நகரில் நடந்த ஓர் உண்மையான சம்பவம் இது. அவ்விடத்தில் […]

Read Full Post »

கடவுள் இருக்கின்றார் என்பதற்கான ஆதாரங்களும் சான்றுகளும் மனிதன் தன்னைத் தானே உருவாக்கிக்கொள்ளவில்லை என்பதே கடவுள் இருக்கின்றார் என்பதற்கான ஓர் அடையாளம் மற்றும் நிரூபனமாக இருக்கின்றது: அவனுடைய படைப்பாளரும் வடிவமைப்பாளரும் மனிதனின்றி வேறொருவரே ஆவார். மனிதனின் படைப்பாளர் மனிதனைப் போன்றவர் அல்லவென்பது உறுதி மற்றும் அது மறுக்கமுடியாத ஒன்றுமாகும் எனெனில், சக்தியற்ற ஒரு சிருஷ்டி வேறொரு உயிரை உருவாக்கமுடியாது. படைப்பாளரான சிருஷ்டிகர்த்தா, படைத்தலுக்காக சகல பூரணத்துவங்களையும் பெற்றிருக்கவேண்டும். சிருஷ்டி பூரணத்துவம் கொண்டதாகவும் சிருஷ்டிகர்த்தா பூரணத்துவம் இல்லாதவராகவும் இருக்கமுடியுமா? ஒரு […]

Read Full Post »

பஹாய் செய்தி – 856 புது டில்லி — கெனடா நாட்டின் ஒட்டாவா நகரின் ஒரு பேருந்தில் ஏறுங்கள்; பாரீஸ் நகரில் ஒரு சஞ்சிகையை புரட்டுங்கள்; அல்லது இத்தாலி நாட்டின் ரிமினி தொடர்வண்டி நிலையத்தின் மேற்புறம் பாருங்கள் — உலகம் முழுவதும், பொதுமக்களின் கவனத்தை இந்தியநாட்டின் பஹாய் வழிபாட்டு இல்லம் ஈர்க்கின்றது. அதன் 25வது ஆண்டு நிறைவை ஒட்டி, தென் ஆஃப்ரிக்காவிலிருந்து ஜப்பான் வரை, ஐக்கிய அமெரிக்காவிலிருந்து சிங்கப்பூர் வரை, தாமரை வடிவிலான அக்கோவில் 14 நாடுகளில் […]

Read Full Post »

மனிதர்களின் வாழ்வில் பிறப்புக்கு பின் இறப்பு என்பது தவிர்க்கமுடியாததாகும். காலங்காலமாக மனிதர்கள் இறப்பிலிருந்து விடுபட முடியுமாவென வினவிக்கொண்டுதான் இருக்கின்றனர் ஆனால், இதுவரை மரணத்திற்கு மாற்றை யாரும் கண்டுபிடித்ததில்லை. மரணம் என்றால் என்ன? பஹாவுல்லா தமது மறைமொழிகள் எனும் நூலில் மரணத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றார்: அதீதரின் மைந்தனே! மரணத்தை உனக்கு மகிழ்ச்சியின் தூதனாக ஆக்கியுள்ளேன். நீ ஏன் வருந்துகிறாய்? ஒளியின் பிரகாசத்தினை உன்மீது விழுமாறு செய்துள்ளேன். அதிலிருந்து நீ ஏன் உன்னைத் திரையிட்டு மறைத்துக் கொள்கின்றாய்? பெரும்பாலான […]

Read Full Post »