Feed on
Posts
Comments

Monthly Archive for July, 2010

காலஞ்சென்ற சிதம்பரம் ஜெயராமன் அவர்கள் பாடிய பாட்டு ஒன்று “காதலுக்குக் கண்ணில்லை காதில்லை கேளாயோ,” எனும் வரியோடு ஆரம்பிக்கின்றது. ஒரு வகையில் இஃது உண்மையே. வாலிப வயதில் இயற்கையின் உந்துதலுக்கு வயப்பட்ட குறிப்பிட்ட ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் இயல்பாகவே ஏற்படக்கூடிய ஈர்ப்புச் சக்தி்யைக் காதல் எனக் கூறுகின்றோம். ஆனால் மிருகவியல்பான இவ்வீர்ப்புச் சக்தியை அன்பு எனக் கூறுவது தவறாகும். அன்பு திடீரென ஏற்படாது. ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துகொள்ளும் போது, அதாவது ஒருவர் மற்றவரின் குறைநிறைகளைப் புரிந்துகொண்டு, […]

Read Full Post »

ஜூலை 25 இரான் நாட்டின் சிறு பான்மை சமூகங்களில் ஆகப் பெரியதும், நீண்டகாலமாகவே ஒடுக்குதல்களுக்கு உட்படுத்தப்பட்டு வந்துள்ள பஹாய் சமூகத்தின் மீதான தாக்குதல்களை இரான் நாட்டின் இஸ்லாமிய அரசு அதிகரித்து வருகின்றது, என அச்சமூகத்தின் பரிந்துரையாளர்கள் கூறுகின்றனர். சமீப காலமாக இரான் நாட்டின் பஹாய் சமய உறுப்பினர்களின் வீடுகள் மற்றும் இடுகாடுகள் தாக்குதல்களுக்கு ஆளாக்கப்பட்டு, அவர்களின் வங்கி சேமிப்பு கணக்குகள் ஆராயப்பட்டும் வருகின்றன. ஜூலை மாதம் 18ம் தேதியன்று, இஸ்பஃஹான் மற்றும் புருஜிர்ட் நகரங்களில் உள்ள இரண்டு […]

Read Full Post »

பஹாய்கள் இரான் நாட்டில் பலவித இன்னல்களுக்கு ஆளாக்கப்பட்டு வந்துள்ளனர். இது கடந்த 160 வருடங்களாகவே நடந்து வருகிறது. பஹாய்கள் அமைதி விரும்பிகள். உலக மக்கள் ஆன்மீக ரீதியில் தன்மைமாற்றம் பெற வேண்டும், அவர்கள் தங்கள் படைப்பின் குறிக்கோளை உணரவேண்டும் அதன் வாயிலாக உலகில் சமயங்கள் ஒன்றுபட்டு மக்களிடையே ஒற்றுமையும் அமைதியும் நிலவ வேண்டும் எனும் நோக்கில் பஹாய்கள் பாடுபடுகின்றனர் மற்றும் மனிதகுலத்திற்கு தங்களால் இயன்ற சேவைகளையும் செய்து வருகின்றனர். இருந்தும் அவர்கள் தங்கள் சமயத்தின் பிறப்பிடத்திலும் வேறு […]

Read Full Post »