Feed on
Posts
Comments

Monthly Archive for November, 2009

இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ… எனும் வார்த்தைகளை நாம் அடிக்கடி கேட்டபோதிலும் அது மனதில் பதிவதில்லை. பின்வரும் படங்கள் இதை சற்று விளக்குவதாக இருக்கும்.

Read Full Post »

‘பெர்செப்ஷன்’ (கருத்துணர்வுகள்?) (நன்றி K. Gopal) …உங்கள் சிந்தனைக்கு… வாஷிங்கடன் டி.சி. மெட்ரோ நிலையத்தில் குளிர் நிறைந்த ஜனவரி 2007 காலைப்பொழுது ஒன்றில் பின்வரும் சம்பவம் நிகழ்ந்தது. வயலின் ஏந்திய மனிதர் ஒருவர் சுமார் 45 நிமிடங்களுக்கு இசைக் கலைஞர் பாக்’கின் 6 படைப்புக்களை வாசித்தார். அவ்வேளை சுமார் இரண்டாயிரம் பேர்கள் அந்த நிலையத்தை கடந்துகொண்டு இருந்தனர். அவர்களில் பெரும்பாலோர் வேலைக்குச் செல்பவர்களாவர். சுமார் 3 நிமிடங்கள் கழித்து நடுத்தர வயதுடைய ஒருவர் அங்கு இசைக்கலைஞர் ஒருவர் […]

Read Full Post »

பஹாய் சமயத்தை ஏற்றுக் கொண்டோரில் பல பிரமுகர்களும் அடங்குவர். ருமேனிய நாட்டின் (விதவை) அரசியார், சமோவா தீவின் மன்னர், பாரசீக அரச குடும்பத்தினர் சிலர் என கூறலாம். அவர்களுள் தத்துஞானியரான லியோ டால்ஸ்டாயும் அடங்குவார். பஹாய் சமயத்துடனான அவரது தொடர்புகள் குறித்து சில விவரங்கள் கீழே வழங்கப்படுகின்றன: லியோ டால்ஸ்டாய் (1828 – 1910) ஒரு மாபெரும் ரஷ்ய தத்துவஞானியும் எழுத்தாளரும் ஆவார். “War and Peace” எனும் மாபெரும் நாவல் இவருடைய படைப்பாகும். இந்த நாவல் […]

Read Full Post »

உலகின் முக்கிய சமயங்கள் சுற்றுச் சூழல் குறித்து செயல்திட்டம் ஒன்றை வழங்கியுள்ளன 4 நவம்பர் 2009 வின்சர், யுனைட்டட் கிங்டம் – பஹாய் சமயம் உட்பட உலகின் முக்கிய சமயங்களைப் பிரதிநிதிக்கும் முதன்மையாளர்கள், சுற்றுச் சூழலை பாதுகாக்கும் நீண்டகால முயற்சி ஒன்றில் தங்கள் சமூகங்களையும் உட்படுத்தும் செயல்திட்ட தொடர்வரிசை ஒன்றை அதிகாரபூர்வமாக அமுல்படுத்திட  சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த வின்சர் அரண்மனையில் நேற்று ஒன்றுகூடினர். (மேலும் விவரங்களுக்கு…)

Read Full Post »

பஹாய் சமயத்தின் ஸ்தாபகரும் இக்காலத்திற்கான கடவுளின் அவதாரமுமான பஹாவுல்லாவின் எழுத்துக்களை சுமார் 100 நூல்களாக தொகுக்கலாம். பல நூல்களையும், ஆயிரக்கணக்கில் நிருபங்களையும் அவரது 40 வருட சமயப் பணிக்காலத்தில் அவர் படைத்துள்ளார். பெரும்பாலான அவரது எழுத்துக்கள் இதுவரை மொழிபெயர்க்கப்படாமலேயே இருக்கின்றன. அவற்றுள் ஒன்று “மருத்துவருக்கான நிருபம்” என்பதாகும். உடல் நலம் குறித்து ஓர் அன்பரின் வினாக்களுக்கான பதிலாக இந்த நிருபம் வரையப்பட்டது. இந்த நிருபம் இதுவரை அதிகாரபூர்வமாக மொழிபெயர்க்கப்படவில்லை ஆனால், அதன் சில பகுதிகள் தற்காலிகமாக மொழிபெயர்க்கப்பட்டுள்ளன. […]

Read Full Post »

சமீப காலமாக உலகம் அழியப்போகிறது எனும் பேச்சு ஆங்காங்கு எழுந்துவருகின்றது. அது குறித்த செய்திப்படங்கள் கூட தொலைக்காட்சியில் இடம்பெற்றுள்ளன மற்றும் விரைவில் உலகம் 2012ல் அழியப்போகிறது என்பது பற்றி ஒரு முழு நீள திரைப்படமும் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த உலக அழிவு குறித்த பேச்சு “2012” படத்தை நிச்சயமாக ஒரு வெற்றிப்படமாக்கும் என்பதில் சந்தேகமில்லை. உலகம் அழியப்போகிறது இது முதன்முறையல்ல. பல முறை இது போன்ற செய்திகள் உலகை வலம் வந்துள்ளன. உதாரணமாக 1963ல் இதே போன்று உலகம் […]

Read Full Post »

கடவுள் யாவற்றையும் படைத்து அவை ஒவ்வொன்றிலும் தமது பன்பு ஒன்றை உட்பதித்துள்ளார் என பஹாய் திருவாக்குகள் கூறுகின்றன. ஆனால், மனிதனில் மட்டும் அவர் தமது அனைத்து பன்புகளையும் பிரதிபலிக்கும் ஆற்றலை வழங்கியுள்ளார். மனிதப் பிறவியின் நோக்கமே கடவுள் மனிதனுக்கு வழங்கியுள்ள இந்த ஆற்றலை மேம்படுத்திக்கொள்வது ஆகும். இதன் காரணமாகவே “மனிதனென்பவன் தெய்வமாகலாம்” என கூறுகின்றோம். இவ்வகையில், பல திரைப்படங்களில் ஆன்மீக மனப்பாங்குகள் குறித்த கருத்து பாடல்கள் பல வெளிவந்துள்ளன. பெரும்பாலும் இவை பழைய படங்களிலேயே அதிகமாக காணப்படுகின்றன. […]

Read Full Post »

பஹாய் சமயத்தின் நிர்வாக அமைப்புக்கள் தனிச்சிறப்பு மிக்கதும் எதிர்ப்புணர்வு அற்றதுமான கலந்தாலோசனை எனும் முடிவுகள் எடுக்கும் செயல்பாட்டை எல்லா நிலைகளிலும் பயன்படுத்துகின்றன. கலந்தாலோசனைக்கான கோட்பாடுகள் பஹாவுல்லாவின் திருவாக்குகளில் பதிக்கப்பட்டுள்ளன, மற்றும், கருத்தொருமித்தலை பேணுவதற்கும் உண்மையை ஆராய்வதற்கும் உரிய ஒரு வழிமுறையெனும் வகையில் அக்கோட்பாடுகள் விரிவான பயன்பாட்டிற்கான உள்ளாற்றலை பெற்றிருக்கின்றன. பார்க்கப்போனால், குழுத்தீர்மானம், கூட்டுறவு ஆகியவை தேவைப்படும் எந்த சூழ்நிலையிலும் அவை பயன்மிக்கவையாக இருப்பதை பஹாய்கள் காண்கின்றனர். இக்கோட்பாடுகள் பஹாய் சமயத்தின் ஸ்தாபனங்களால் மட்டுமல்லாமல் பஹாய்களின் தொழில்களில், பஹாய்களால் […]

Read Full Post »