Feed on
Posts
Comments

பஹாய் எதிர்ப்பு பிரச்சாரங்கள் பஹாய்களுக்கு புதியனவல்ல. இவ்வருடம் இரான் நாட்டின் முல்லா ஒருவர் தமது சமயக்கூட்டத்தினருக்கு பின்வருமாறு பஹாய்கள் குறித்து எச்சரிக்கை விடுக்கின்றார்.

உங்கள் கண்ககளை திறந்து பாருங்கள்!
பஹாய்கள் பெரும் சலசலப்பை உண்டாக்கிக் கொண்டிருக்கின்றனர்
அவர்கள் என்ன செய்துள்ளனர் என்பதைப் பார்த்தீர்களா?
உங்களுக்கு அது தெரியுமா?

அவர்களின் செயல்கள் எவ்வாறு அவர்களின் போதனைகளோடு ஒத்திருக்கின்றன என்பதைப் பார்த்தீர்களா? அவர்கள் தங்கள் சமயத்தை இவ்வகையிலேயே மிகவும் வெற்றிகரமாகப் போதிக்கின்றனர்.
இதை நீங்கள் தெரிந்துவைத்திருக்கின்றீர்களா? தெரிந்துவைத்திருக்கின்றீர்களா?

800 மாணிவியரைக் கொண்ட ஒரு பள்ளியில், ஒரு பஹாய் மாணவி வெகு கெட்டிக்காரத்தனமாகப் பயின்று எல்லாரும் பிரமிக்கும் அளவுக்கு நடத்தையுடைவளாக இருக்கின்றாள்.
இதுவும் உங்களுக்குத்தெரியுமா?

அவளுடைய நடத்தையின் மேன்மை எத்தகையது என்றால் அவளை முன் பின் தெரியாத எவரும் அவளை ஓர் ஆயத்துல்லாவின் மகள் என்றே நினைப்பார்கள்… ஆனால், அவள் ஒரு பஹாய்.

ஒரு பஹாய் பெண்ணின் நடத்தையையும், ஒரு ஷியா பெண்ணின் நடத்தையையும் பாருங்கள்!
ஆ ஆ ஆ! நான் மேற்கொண்டு பேசிக்கொண்டு போனால் நீங்கள் அனைவரும் நம்பிக்கையிழந்து போவீர்கள்! உண்மையில் “நான் உங்களை நாளைக்கு நரகத்திலேயே பார்த்துக்கொள்கிறேன்,” என கூறிவிடுவது நல்லது.

அவர்கள் செய்வதைப்பாருங்கள். நான் உங்களை நம்பிக்கையிழக்கச் செய்திட விருப்பமில்லை. – உங்களை விழித்தெழச் செய்திடவே விரும்புகிறேன்!
உங்களுக்கு (முல்லாக்கள்) எதையாவது செய்யத் தெரியுமோ தெரியாதோ. அப்படி இயலாதென்றால், தொலைந்து போய்விடுங்கள், வேறு யாராவது இந்த வேலையை செய்யட்டும். ஒரு முல்லா ஏதாதவது நல்ல காரியம் செய்த மறு கணமே, உங்களில் ஒருவர் வேறு எதையாவது செய்து குழப்பிவிடுகிறீர்கள்.

நான் ஒன்று சொல்லப் போகின்றேன். அது உங்களுக்குப் பிடிக்கவில்லையென்றால் நீங்கள் இங்கு நாளைக்கு வரத்தேவையில்லை.

பஹாய்களின் சமயம் நமக்கும் நமது முயல்வுகளுக்கெல்லாம் ஓர் ஓநாயைப் போன்றது.
போதைப் பழக்கத்துக்குள்ளான ஒரு பஹாய் அல்லது யூதரை எனக்குக் காட்டும் முதல் மனிதருக்கு நான் ஒரு பரிசு கொடுக்கிறேன்.
போதைப் பழக்கத்திற்கு உள்ளாகியிருக்கும் ஒரு பஹாயைக்கூட நீங்கள் காணமுடியாது.
கெட்ட நடத்தையுடைய அல்லது மற்றவர் சட்டையைப் பிடித்து கொச்சையாகத் திட்டும் ஒரு பஹாயைக் கூட நீங்கள் பார்க்கமுடியாது.

குர்’ஆன் குறித்து நடத்தப்பட்ட ஒரு பள்ளி சோதனையில், ஒரு பஹாய் 20/20 மார்க் வாங்குகிறார் ஆனால் ஒரு ஷியா முஸ்லிம் 2/20 வாங்குகிறார்.
(அது கூட, அம் மாணவரின் தந்தை நமக்குத் தெரிந்தவர் என்பதால் அந்த 2 புள்ளிகளை நாம் வழங்குகிறோம்). இல்லையென்றால் அந்த தந்தை திருப்தியடையாமல் ஆத்திரம் கொள்ளக்கூடும்.

நானும் ஒரு பஹாய், யூத, மற்றும் கிருஸ்தவ மாணவனை பெற்றிருந்தேன். அந்தப் பஹாய் மாணவரின் இயல்பு மற்றும் நடத்தைக்கு நான் 20/20 புள்ளிகள் கொடுப்பேன்… ஏனெனில் நான் அவருக்கு 30/20 என கொடுக்க முடியாது.

ஒரு வகுப்பில் ஒரு பஹாய் மாணவன் யாருடனும் சண்டையிட மாட்டார், மற்றவரைப் பார்த்து சாபமிடமாட்டார், வகுப்பை குலைக்கமாட்டார், (சத்தமாக) மிகவும் நேர்த்தியான உடைகள் (மேலும் சத்தமாக): ஆனால் ஒரு ஷியாவின் நிலை என்ன? ஒன்றுமே இல்லை. அப்பள்ளி முழுவதும் தேடினாலும் 2 கிலோ விஷயம் கூட கிடைக்காது.

One Response to “ஒரு முல்லாவின் வசைமாரி!”

  1. மடத்துறவி says:

    முல்லா பஹாய் சமயத்தை பாராட்டுவது போல் உள்ளதே! வாழ்க முல்லா, வளர்க உங்கள் தொண்டு.

Leave a Reply