Feed on
Posts
Comments

Monthly Archive for June, 2009

கடவுள் மனிதனுக்கு வழங்கியுள்ள வெகுமதிகளுள் பகுத்தறியும் ஆற்றலே அதி உயர்ந்தது என கூறலாம். இந்த ஆற்றலின் வாயிலாகவே மானிடம் அனைத்து உயிரினங்களில் கடவுளின் நாமத்தை உச்சரிக்கும் ஒரே உயிரினமாக தனித்தன்மை பெற்றுள்ளது. மனிதனுக்கு பஞ்சேந்திரியங்களான பார்வை, செவி, நுகர்வு, சுவை, ஸ்பரிசம் ஆகிய புற ஐம்புலன்கள் உள்ளன இவற்றின் உதவியோடு மனிதன் வஸ்துநிலையில் உள்ளவற்றை உணர்கின்றான். இவையல்லாமல் மனிதனுக்கு கற்பனை, சிந்தனை, புரிந்துகொள்ளல், பொதுப்புலன் மற்றும் நினைவாற்றல்கள் என அக ஐம்புலன்கள் உள்ளன. வெளிப்புலன்கள் மற்றும் உட்புலன்கள் […]

Read Full Post »

5 ஜூன் 2009 இரான் நாட்டில் பஹாய் சமயம் ஆரம்பித்ததிலிருந்து பஹாய்கள் பல கொடுமைகளுக்கு ஆளாகியுள்ளனர். இன்றும் அவர்கள் கொடுமைப்படுத்தப்படுகின்றனர், மற்றும் பல பஹாய்கள் ஜோடிக்கப்பட்ட பல குற்றச்சாட்டுகளின் விளைவாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்; அவர்களுள் ஒருவர் திருமதி பாஃரிபா கமாலபாடி. திருமதி பாஃரிபா கமாலபாடி, மற்றும் ‘யாரான்’ எனப்படும் ஆறு பஹாய் தலைவர்கள், மற்றும் வேறு பல பஹாய்கள் பிரசித்தமான எவின் சிறையில் வாடுகின்றனர். அவர்களின் உடல்கள் சிறைப்படுத்தப்பட்டும் உளவியல் ரீதியில் சித்திரவதைக்குள்ளாக்கப்பட்ட போதிலும், அவர்களின் குடும்பங்கள், […]

Read Full Post »

சமீபத்தில் ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் (Steven Hawkings) எனும் பிரசித்தி பெற்ற விஞ்ஞானி யாஹூவிற்கு (Yahoo) அனுப்பிய ஓரு செய்தியில் பின்வரும் கேள்வியை பொதுவாக கேட்டுள்ளார்? மனுக்குலம் அடுத்த நூறு வருடங்களைத் தாங்குமா? இதற்கான அவருடைய பதில் குறித்து அவரிடம் வினவப்படுகையில், அவர் அதற்கு பதில் தெரியாதென்று கூறி திகைக்க வைத்தார். ஸ்டீவன் ஹௌக்கிங்ஸ் தாம் விடுத்த கேள்வி குறித்து அளித்த விளக்கம். அடுத்த 100 ஆண்டுகளை மனுக்குலம் எவ்வாறு சமாளிக்கப்போகின்றது. இதற்கான பதில் எனக்குத் தெரியாது. அதனால்தான் […]

Read Full Post »

(மார்ஸியே கேய்ல் அவர்களின் – “தப்ரீஸ் நகரில் ஒரு நாள்” எனும் கட்டுரையின் தமிழாக்கம்) மரம் ஒன்றின் கீழ் ஓடும் நீரோடையின் கரையில் சாய்ந்துகொண்டு, ஓடையில் ஓடும் நீரை ஒரு பாரசீகர் மணிக்கணக்காகப் பார்த்து ரசித்துக்கொண்டிருப்பார். சீனர்கள், கண்ணாடியைப் போன்று தோற்றமளிப்பதும், சப்பென்றிருப்பதுமான நீரையே விரும்புவார்கள் எனக் கூறுகின்றனர்; ஆனால் ஒரு பாரசீகரோ, தெளிந்த குறுகிய நீரோடையில் நெளிந்து பிரயாசையுடன் ஒடும் நீரையே விரும்பி ரசிப்பார். ஒரு வேளை அக்குளிர்ந்த நீரோடையினுள் ஒரு குடுக்கை நிறைய திராட்சை […]

Read Full Post »

நமக்குத் தெரிந்தவர்கள் யாராவது நோய்வாய்ப்பட்டிருந்தால் அவருக்காக பிரார்த்தனை செய்வது வழக்கம்.  இத்தகைய பிரார்த்தனைகள் நோயை குணப்படுத்த உதவுகின்றனவா, அப்பிரார்த்தனையில் நாம் என்ன வேண்டுகிறோம் மற்றும் நாம் வேண்டுவதுதான் அந்நோயாளிக்குத் தேவை என்பது போன்றவை குறித்த ஆய்வே பின்வரும் கட்டுரை. நோயுற்றோருக்காகப் பிரார்த்திப்பது – இது துணைபுரிகிறதென அறிவியல் நிரூபிக்கமுடியுமா? ஸான் டியேகோ, ஐக்கிய அமெரிக்கா – சமீபத்தில் நடைபெற்ற வட அமெரிக்க பஹாய் ஆய்வுகள் சங்கத்தின் 32வது வருடாந்திர மாநாட்டின் பேச்சாளர்களில் ஒருவரான, டாக். தயீத் குட்டுஸி, […]

Read Full Post »