Feed on
Posts
Comments

Monthly Archive for May, 2009

வருங்காலத்தில் மனிதர்களின் உணவு எதுவாக இருக்கும் என அப்து’ல்-பஹாவிடம் வினவப்பட்டபோது, அவர் பின்வருமாறு பதிலளித்தார்: “பழங்களும் தானியங்களும். புலாலே உண்ணாத ஒரு காலம் வரும். மருத்துவ அறிவியல் இப்போது அதன் ஆரம்பப் பருவத்தில் இருக்கின்றது, இருந்தபோதும் அது நமது இயல்பான உணவு பூமியில் விளையக்கூடியவையே என எடுத்துக்காட்டியுள்ளது. இந்த இயற்கை உணவுக்கான நிலையை மனிதர்கள் படிப்படியாக அடைவார்கள்.” வேறோர் இடத்தில், அவர் மனிதர் மற்றும் மிருகங்களின் பற்கள் மற்றும் ஜீரன உருப்புக்கள் குறித்து விளக்கினார். மனிதர்கள், தாவரவுண்ணிகள், […]

Read Full Post »

இந்த பூமி தனியே உருவாக்கப்படவில்லை. ஆரம்பத்தில்  “பெருவெடிப்பு” (Big Bang) அல்லது அதிர்வெடி ஒன்றிலிருந்து ஒன்றாக இருந்த பொருள் அல்லது வஸ்து (matter) அண்டசராசரங்களாக, தீக்குழம்புக் கோள்களாக திக்கெல்லாம் தெறித்துச் சிதறி இன்று நாம் காணும் இந்த நிலைக்கு, பேரண்டமாக, அண்டங்களாக, மண்டலங்களாக, கோள்களாக, வின்கற்களாக உருவெடுத்துள்ளன. ஆம்பத்தில் ஒன்றாக இருந்தது மாற்றம் கண்டு இன்று பலவாக பல்கிப் பெருகியுள்ளது. ஆரம்பத்தில் இந்த பூமி ஒரு தீக்குழம்புக் கோளாகவே இருந்துள்ளது. பிறகு சிறுகச் சிறுக குளிர்ந்து வாயு […]

Read Full Post »

புறங்கூறாமை

புறம் பேசுவது சாதாரன மனித இயல்பாக இன்று இருக்கின்றது. எங்காவது நான்கு பேர்கள் கூடிவிட்டால் அங்கு பிறரைப் பற்றிய பேச்சு ஆரம்பித்துவிடும் சாத்தியம் அதிகமாகவே உள்ளது. அவ்வாறு புறம்பேசுவதன் விளைவுகள் குறித்து அறியாமலும் ஆழச் சிந்திக்காமலும் இச் செயலில் மனிதர்கள் ஈடுபடுகின்றனர். அப்துல்-பஹா அவர்கள் நாம் ஒரு புலியைக் கண்டால் எவ்வாறு தலைதெறிக்க ஓடிடுவோமோ அவ்வாறே புறம்பேசுதலிலிருந்து ஓடிப்போக வேண்டுமென அறிவுறுத்துகின்றார். பஹாய் எழுத்தோவியங்கள் புறம்பேசுதலை கொலைக்குச் சமமாக மதிப்பிடுகின்றன மற்றும் கடவுளின் சாபத்தை ஈர்க்கும் ஒரு […]

Read Full Post »

சமீபத்தில் ஜெர்மனி நாட்டில் 1980களில் கண்டுபிடிக்கப்பட்ட, ‘ஐடா’ எனப் பெயர் சூட்டப்பட்ட குரங்கு போன்ற உருவுடைய புதைபடிமம் (fossil) ஒன்றை மறு ஆய்வு செய்த அறிவியலாளர்கள் அப்படிமம் குரங்கினம் மற்றும் மனித இனத்தை இணைக்கும் ஒரு வகை உயிரினமாக இருக்கக்கூடும் என அறிவித்துள்ளனர். குரங்கிலிருந்து மனிதன் பிறந்தான் எனும் வாதம் நீண்டகாலமாகவே நடந்துகொண்டிருக்கின்றது. ஆனால், குரங்கு இனத்திலிருந்து மனித இனம் எப்போது பிரிந்தது, ‘ஹோமோ சேப்பியன்ஸ்’ (மனிதனின் அறிவியல் ரீதியான பெயர்) இனம் எப்போது ஆரம்பித்தது என்பது […]

Read Full Post »

பள்ளிக்கூடங்களில் காணப்படும் சரித்திர பாடநூல்களைப் பார்க்கும் போது இந்த வருடம் இந்த சண்டை நடந்தது அந்த வருடம் அந்த சண்டை நடந்தது, அதில் அவ்வளவு பேர்கள் அழிந்தனர் இதில் இவ்வளவு பேர்கள் அழிந்தனர் என்பதுதான் சரித்திரமோ எனும் ஒரு பொதுவான எண்ணம் உருவாகக்கூடும். இதன் காரணம் உலக வரலாறு இது நாள் வரை இத்தகைய போர்களாலும் அழிவுகளாலும் நிறைந்துள்ளதுதான் காரணம். அப்துல்-பஹா அவர்கள் இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில், முதலாம் உலக யுத்தம் ஆரம்பமாவதற்கு முன்பே அப் போர் […]

Read Full Post »

இன்று உலகை உலக்கி வரும் பிரச்சினைகளுள் பொருளாதாரப் பிரச்சினை முன்நிற்கின்றது. வேலை இழந்தவர்கள் நூற்றுக்கணக்கிலிருந்து ஆயிரக்கணக்கையும் தாண்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. சுமார் பத்தாண்டுகளுக்கு ஒருமுறை இதை நாம் சந்திக்கவேண்டியுள்ளது. இவ்வித சீர்கேடுகள் எதனால் ஏற்படுகின்றன? ஒரு முறை ஏற்பட்டதென்றால் அது எதேச்சையாக நேர்ந்தது என கூறலாம். ஆனால், இது அடிக்கடி ஏற்படுகிறது. இதன் விளைவாக சமூகத்தில் பல சீர்கேடுகள் விளைகின்றன. வேலை இழந்தவர்கள் என்ன செய்வார்கள்? திருட்டுகள் நடக்க ஆரம்பித்துவிடும். தற்கொலைகள் கூட நிகழலாம். 1920களில் அமெரிக்காவில் […]

Read Full Post »